முதலிரவை பதிவு செய்ய ஆசைப்படும் பிரிட்டன் ஜோடி: ரூ.1.8 லட்ச சம்பளத்துக்கு வீடியோகிராஃபர் கிடைக்காத சோகம்

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 01:56 am

couple-are-looking-for-a-videographer-to-film-their-wedding-sex-tape-and-they-ll-pay-2k

விரைவில் திருமண செய்துகொள்ள இருக்கும் பிரிட்டன் காதல் ஜோடிகள் தங்களது திருமண நாள் இரவை வீடியோ பதிவு செய்ய ஆள் தேடி வருகின்றனர். சம்பளமாக  ரூ.1.80 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு ஜோடி புதிய விதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். செப்டம்பரில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் அந்த தம்பதியர், தங்களது திருமண வேலைகளுக்காக மேடை அலங்காரம், போட்டோகிராபார், வீடியோகிராபர், சமையல் ஆட்கள் போன்றவற்களை ஏற்பாடு செய்யும் இணையதளம் ஒன்றில் தான் அந்த ஆச்சரியமான விளம்பர அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதில், செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் திருமண நாள் அதாவது முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை எனக் குறிப்பிட்டுள்ளனர். வேலை நேரம் இரவு 1 மணி முதல் 3 மணி வரை எனவும், இதற்காக 2 ஆயிரம் பவுண்டு  (இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம்) சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் தங்களை அறிமுகப்படுத்த விரும்பாதவர் (அனானிமஸ்) என தங்களை அறிமுகப்படுத்துக்கொண்டுள்ளனர். 

காதலித்து திருமணம் செய்ய உள்ள இவர்கள், திருமணம் செய்ம் முடிவு செய்வதற்கு முன்னரே தங்களது முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என ஆசைக் கொண்டுள்ளனர். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை பதிவு செய்வதைப் போல இதனையும் பதிவு செய்வதில் தவறு இல்லை என அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியும் கொடுத்துள்ளனர். 

ஆனால், இதுவரை இந்த தம்பதிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டதாகவும், பலரும் இது அசவுகரியமான வேலை என மறுப்பதாக கவலைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் திருமண தேதிக்குள் ஆள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.