நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்!

  Padmapriya   | Last Modified : 12 Aug, 2018 07:26 pm

nobel-prize-winning-author-v-s-naipaul-dies-aged-85

நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி பிரிட்டன் நாட்டு எழுத்தாளர் நைபால் (85) வயது முதிர்வால் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானார். 

மேற்கத்திய நாடுகளில் உள்ள கரீபியன் தீவுகளில் டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ் நைபாலின்.   சர் விதியாதர் சுராஜ்பிரசாத் நைபால் என்பது இவரது முழுப்பெயராகும்.  இவர்களது பெற்றோர் அக்காலத்தில் இந்தியாவிலிருந்து அங்கு குடியேறியவர்கள் ஆவார். 

பிரிட்டனில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால், 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தான் அவரது தனது முதல் மனைவி பாட்-ஐ சந்தித்து திருமணம் செய்து கொண்டார். பாட், நைபாலுக்கு இலக்கியத் துறையில் பெரிதும் துணையாக இருந்தவர். தனது இளமை காலத்தில் நைபால் ஏழ்மைக்கு இடையே தான் கழித்தார். 

1971-ம் ஆண்டு 'இன் ஏ ப்ரீ ஸ்டேட்' என்ற புத்தகத்துக்காக அவருக்கு புக்கர் விருது வழங்கப்பட்டது. இவரது முதல் மனைவி 1996ல் மறைந்த பின், பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

பின்னர்,  2001ஆம்  ஆண்டு 'ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்' என்ற புத்தகத்துக்காக அந்தாண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து கரீபியன் நாட்டில் குடியேறிவர்கள் குறித்து இந்த புத்தகம் பேசியது. இந்த நிலையில்,  நைபால் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். நைபாலின் மறைவுக்கு சர்வதேச அளவிலான பல எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.