வலியும் அவமானமும் ஏற்பட்டுவிட்டது !- பாலியல் விவகாரத்தால் போப் வேதனை

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2018 02:41 pm
pope-tells-ireland-he-s-shamed-by-church-s-abuse-failures

தேவாலய பாதிரியார்கள் பாலியல் விவகாரத்தில் ஈடுப்பட்திருப்பது சமுதாயத்துக்கே வலியையும் வேதனையையும் ஏற்படுத்திவிட்டதாக போப் வேதனை தெரிவித்துள்ளார். 

போப் பிரான்சிஸ் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 39 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குச் செல்லும் முதல் போப் என்ற பெருமையை தற்போதைய போப் பிரான்சிஸ் பெற்றுள்ளார். அயர்லாந்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பை அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் பேசுகையில், '' அயர்லாந்தில் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ மதகுருக்களால் நிகழ்த்தப்பட்ட வெறுக்கத்தக்க (வன்புணர்வு) குற்றங்கள் குறித்து கத்தோலிக்க திருச்சபைகள் போதுமான அளவு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இந்த செயல் வேதனை அளிக்கிறது. அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்கள், அந்த குழந்தைகளை இதுபோன்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். இந்த மோசமான நிகழ்வு குறித்து நான் பேசாமல் இருக்கப் போவதில்லை. பேராயர்கள், பாதிரியார்கள் போன்ற திருச்சபை ஊழியர்கள் இது போலான வெறுக்கதக்க குற்றங்கள் மீது நீண்டகாலமாக போதுமான நடவடிக்கை எடுக்காததால் அது தற்போது நியாயமான பெரும் சீற்றத்தை எழுப்பியுள்ளது. அந்த சீற்றம் அனைவரது காதுகளிலும் ஓங்கி ஒலிக்கின்றது. 

இந்த கீழ்த்தனமான செயல் கத்தோலிக்க சமுதாய மக்களுக்கு வலியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை நானும் உணர்கிறேன். இனி எந்த சூழ்நிலையிலும் இம்மாதிரியான குற்றங்கள் தேவாலயங்களில் நடைபெற அனுமதிக்க போவதில்லை" என்றார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கத்தோலிக்க பாதிரியர்கள் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்தியாவிலும் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்கள் தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட விவகாரம் மற்றும் துறவற சபையச் சேர்ந்த கன்னியாஸ்திரியையே ஆயர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உலகம் முழுக்க இதுபோன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி வரும்சூழலில் போப் பிரான்சிஸின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close