குழந்தைகள் வன்புணர்வு! - நடவடிக்கை எடுக்க போப்பை வலியுறுத்திய அயர்லாந்து பிரதமர்

  Padmapriya   | Last Modified : 28 Aug, 2018 12:20 am

pope-s-visit-reveals-decline-of-church-s-power-in-ireland

அமெரிக்காவில் குழந்தைகளை வன்புணர்வு செய்த மதகுருக்கள் மீது நடவடிக்கை எடுக்க போப் பிரான்சிஸிடம் அயர்லாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில் 300க்கும் மேற்பட்ட கத்தோலிக்க பாதிரியார்கள் 1000-க்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற தவறுகளை செய்யும் பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களை அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் போப் பிரான்சிசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார் அயர்லாந்து பிரதமர். 

அயலர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் இது குறித்து கூறுகையில், ''மத தலைவர்களால் நெஞ்சை பிளக்கும் பேசப்படாத குற்றங்கள் நடப்பதும் அதை மறைக்க தேவாலய உயர் பொறுப்பில் உள்ளவர்கள் முயற்சிப்பதும் கேட்டுக்கேட்டு அயர்லாந்து மக்களுக்கு பரிட்சயமானதாகிவிட்டது.

குழந்தைகளுக்கு எதிராக புரியப்படும் குற்றங்களை சகித்துக் கொள்ள முடியாது. குற்றாவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் பெரிய சமுதாயங்கள் தேவாலயங்களின் இந்த குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தவறியதால், இது ஒரு கசப்பான சேதமடைந்த பாரம்பரியத்தை உருவாக்கியதோடு பலருக்கு நீங்காத வலியும், வேதனையும் அளித்துவிட்டது'' என்றார்.

போப் பிரான்சிஸ் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக அயர்லாந்து மக்களிடையே பேசிய அவர், தேவாலய பாதிரியார்கள் பாலியல் விவகாரத்தில் ஈடுப்பட்டிருப்பது கத்தோலிக்க சமுதாயத்துக்கே வலியையும் வேதனையையும் ஏற்படுத்திவிட்டதாக போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக கத்தோலிக்கர்களுக்கு போப் பிரான்சிஸ் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். 

இந்தப் பயணத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களையும் போப் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் உலக கத்தோலிக்கர்களின் சந்திப்பு அவர் வருகை ஏற்பட்டுள்ள நேரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.