லண்டனில் துப்பாக்கிச் சூடு: 16 வயது சிறுவன் உயிருக்கு போராட்டம் 

  Padmapriya   | Last Modified : 02 Sep, 2018 05:37 pm
boy-16-shot-overnight-in-latest-outbreak-of-violence-in-london

லண்டன் நகரில் நடைபெற்ற மர்ம துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் 16 வயது சிறுவன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள யார்க் சாலையில் உள்ளூர் நேரப்படி இரவு 12.45 அளவில் திடீரென துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது. இதில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

இந்த மர்ம துப்பாக்கிச் சூடு குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த லண்டன் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது வரை எந்த விவரமும் தெரியாத நிலையில் கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. போலிசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இங்கிலாந்தில் இந்த வருடத்தில் மட்டும் 102 மர்ம கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்குகளில் இரண்டு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close