மேயருக்கு பிகினி உடை: லண்டன் மக்கள் நூதனப் போராட்டம்!

  Padmapriya   | Last Modified : 03 Sep, 2018 03:01 pm
balloon-poking-fun-at-mayor-sadiq-khan-flies-over-london

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அதன் மேயர் சாதிக் கானுக்கு எதிராக பெருந்திரளான போராட்டாம் நடைபெற்றது. போராட்டகாரர்கள் மேயரின் உருவ பொம்மைக்கு பிகினி உடை அணிவித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

லண்டன் நகரில் பெருகி வரும் குற்றச்செயல்களை மேயரின் செயல்திட்டங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம்சாட்டி நூற்றுக்கணக்கான போதுமக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  லண்டனில் சதுக்கத்துக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மேயரை பிரதிபலிக்கும் பிகினி அணிவித்த பலூன்களை பறக்கவிட்டனர். மேலும், லண்டன் நகரை பாதுகாப்பானதாக மாற்ற வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டனர். 

லண்டனின் தென்மேற்கு பகுதியில் உள்ள யார்க் சாலையில் ஞாயிற்றுகிழமை இரவு திடீரென துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டது. இதில் ஒரு சிறுவன் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த மர்ம துப்பாக்கிச் சூடு குறித்து விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த லண்டன் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது வரை எந்த விவரமும் தெரியாத நிலையில் இந்தச் சம்பவம் உள்ளது.

இங்கிலாந்தில் இந்த வருடத்தில் மட்டும் 102 மர்ம கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பான வழக்குகளில் இரண்டு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது.  குற்றச் சம்பவங்களால் அதிருப்தி அடைந்துள்ள லண்டன் மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து சென்றபோது, அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 'பேபி ட்ரம்ப்' பலூன்களை பறக்கவிடும் போராட்டத்துக்கு மேயர் சாதிக் கான் அனுமதி அளித்திருந்தார். அந்தப் போராட்டத்துக்கு பதிலடி போலவே, இந்தப் போராட்டம் அமைந்திருந்ததாக லண்டன் மக்கள் தெரிவித்தனர். 

Newstm.in 

விமானத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக கோஷம்: பயணியிடம் தமிழிசை வாக்குவாதம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close