நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்: விரலை இழந்த மாணவி

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2018 11:30 am
student-has-thumb-amputated-after-developing-rare-form-of-skin-cancer-caused-by-biting-her-nails

இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் நகம் கடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி, பின்னாளில் அதுவே புற்றுநோயாக மாறி அதன் காரணத்தால் தனது கட்டை விரலை அகற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது புற்றுநோய் சரியாகாதது தான் வேதனை. 

இங்கிலாந்து கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்த கொர்டேனி விதோர்ன் (20). கல்லூரி படிப்பு பயின்று வரும் இவருக்கு சிறு வயது முதலே கை விரல்களை கடிக்க்கும் பழக்கம் உள்ளது. சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரது வலது கட்டை விரல் நகம் கருப்பாக நிறம் மாறத் தொடங்கியுள்ளது. சரும பிரச்னை என நினைத்த அவர் சில அதற்காக சில கிரீம்களை பூசி பின் சரியாகாத நிலையில் தனது கையை துணியால் மூடி மறைத்து வைத்துக்கொண்டுள்ளார். இப்படியே சுமார் 4 ஆண்டு காலம் ஓடியுள்ளது. 

ஆனால் பின்னாளில் தான் நகம் கடித்ததன் காரணமாக தான் தனது விரல் கறுப்பாக மாற தொடங்கியது என்று. வலியும் ஏற்பட, தாங்க முடியாத நிலையில் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர், மருத்துவர்கள் 'அக்ரல் லெண்டிஜினஸ் சப்லுகுஜுவல் மெலனோமா' என்ற அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். 

இதன் பின்னர், இதற்காக விதோர்னுக்கு நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின் அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. ஆனால் புற்றுநோயை அவரது உடலிலிருந்து முழுமையாக அகற்ற முடியவில்லை. தற்போது விதோர்ன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைபெற்று வருகிறார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close