லண்டனில் ஆஜராகிறார் விஜய் மல்லையா: இந்தியா கொண்டுவர வாய்ப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 01:46 pm
vijay-mallya-to-return-to-uk-court-for-extradition-hearing

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா அந்நாட்டு நீதிமனறத்தில் இன்று ஆஜராகிறார். அவருக்கு இங்கு சிறை தயாராக இருக்கும் நிலையில் இந்தியா அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. 

கிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜயமல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. 

இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜராகிறார். அப்போது மும்பையில் தயார் செய்யப்பட்டுள்ள ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பதற்கான இடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி பார்வையிட உள்ளார். இதன் பின் அவர் விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார் எனத் தெரிகிறது.  

முன்னதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன், ஆதார்டு சிறையில் மல்லையாவுக்கு அமைக்கப்பட்டுள்ள சிறை அறையை வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு தேவையான வசதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அந்த வீடியோவில், தொலைக்காட்சிப் பெட்டி, தனி கழிப்பறை, துவைக்கும் இடம், வெயில்படும் படி நடை பயிற்சி செய்ய காற்றோட்டமான இடம் போன்ற அம்சங்கள் நிரம்பியது, விஜய் மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்த்தர் ரோடு ஜெயிலின், பேரக் எண் 12 சிறை. இந்திய சிறைகளில் போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என மல்லைய்யா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னர் கூறப்பட்டது. நீதிபதி, மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் சிறை அறையை வீடியோவாக எடுத்து ஆதாரமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பேரிலேயே இந்த வீடியோ எடுத்து தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close