மனைவிக்கு தெரியாமல் சமோசாவை மறைத்த இளவரசர் ஹாரி!

  Newstm Desk   | Last Modified : 25 Sep, 2018 09:42 pm
viral-video-prince-harry-sneaks-a-samosa-out-of-meghan-markle-s-charity-event

இங்கிலாந்து இளவரசர் ஹாரி அவரது மனைவி இளவரசி மேகனுக்கு தெரியாமல் சமோசாவை மறைத்து வைத்து எடுத்து செல்லும் வீடியோக் காட்சிகள் சமுகவலைதளங்களில் விரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டிவி நடிகை மேகன் மெர்கலுக்கும் கடந்த மே மாதம் லண்டனில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகனின் காதல் சமாச்சாரங்கள் செய்திகள் ஆவதும் அதனை மக்கள் ரசிப்பதும் இங்கிலாந்தில் வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றிலிருந்து இங்கிலாந்து இளவரசர் ஹாரி, சமோசாவை திருடிச் செல்லும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

லண்டனில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் மற்றும் அவரின் தாயார் சென்றிருந்தனர்.  அப்போது இளவரச குடும்பத்திற்கு பிடித்தமான உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இந்த உணவில்  பரிமாறப்பட்ட சமோசா ஹாரிக்கு மிகவும் பிடித்ததாம். ஆனால் அதனை அதிகமாக சாப்பிட வேண்டாம் என மனைவி மேகன் தடுப்பாராம். 

இதனால், ஹாரி இளவரசிக்கு தெரியாமல் சமோசாவை மறைத்து வைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த கேமிராவில் பதிவாகின. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமக பரவி வருகிறது.  இளவரசராக இருந்தாலும் மனைவி விஷயத்தில் இப்படி தான் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close