• வியட்நாம், ஆஸ்திரேலியாவுக்கு குடியரசுத் தலைவர் அரசுமுறைப் பயணம்
  • ஜனவரி பேரணி ஓர் திருப்புமுனை: மம்தா பானர்ஜி
  • தேனி, திருவாரூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
  • இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே
  • அரையிறுதியில் தமிழக ரோல்பால் அணிகள்

அமெரிக்கா மீது அதிருப்தி: கஷோகியின் இறந்த உடல் கேட்டு காதலி உருக்கமான வலியுறுத்தல் 

  Padmapriya   | Last Modified : 30 Oct, 2018 05:17 pm

khashoggi-s-fiancee-speaks-about-death-squad-killing

ஜமால் கஷோகியின் உடலை சவுதி அரசு, இறுதி சடங்கு செய்ய அளித்ததாக வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா வாய்மூடி மவுனமாக இருப்பதாகவும் அவரது காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறினார். 

லண்டனில் நடைபெற்ற ஜமால் கஷோகிக்கான இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது காதலியும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவருமான ஹட்டீஜ் ஜெங்கிஸ் பேசுகையில், சவுதி மன்னருக்கு ஜமாலின் உடல் எங்கு உள்ளது என்று நன்றாகவே தெரியும். அவர் அதனை தெரிவித்தாக வேண்டும். இந்த விவகாரத்தில் அழுத்தம் தர தவிர்த்து வரும் அமெரிக்கா போன்ற நாடுகள் இது போன்ற துரோகத்தை நிறுத்த வேண்டும் என்று கடுமையாக பேசினார். 

மேலும் பேசிய அவர், ''சவுதி அவரது உடல் இருக்கும் இடத்தை கூறியாக வேண்டும். இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல, இஸ்லாமிய சமுதாயத்தின் மற்றும் மனிதநேயமுள்ளவர்களின் வலியுறுத்தல்.  எனக்கு நிதி கிடைத்தாக வேண்டும். ஜமாலை கொலை செய்தவர்கள் மட்டுமல்ல, இதற்கு கட்டளையிட்டவர்கள், திட்டம்தீட்டியவர்களையும் அம்பலப்படுத்த வேண்டும். இது எனது கேள்விகள் அல்ல, லட்சக்கணக்கானவர்கள் விடைத் தேடுவது. இந்தக் கொடூரக் கொலைக்கு பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்தே தீரும்'' எனக் கூறினார். 

முன்னதாக, கஷோகியை படுகொலை செய்யவில்லை என்று சாதித்த சவுதி அரசு, திடீரென விசாரணையின் போது தவறுதலாக கஷோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ சவுதி சென்றபோது கூறி சமரசத்தில் ஈடுபட்டதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்டோபர் 2 ம் தேதி துருக்கி நாட்டு காதலி ஜெங்கிஸை திருமணம் செய்வதற்காக தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.

இதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறியது. ஆனால் அவரது உடல் பதுக்கப்பட்ட இடம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் சவுதியின் முரணான கருத்துகளை சர்வதேச நாடுகள் கண்டித்து வருகின்றன. 

தொடர்புடையவை:
'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!  

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.