பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்!

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 05:35 am
theresa-may-get-support-of-uk-cabinet-for-brexit

கடும் எதிர்ப்புக்கு பின், ஐரோப்பிய யூனியன் தலைமையுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேசி கொண்டு வந்த வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியேறுவதற்கான பிரெக்சிட் பொதுவாக்கெடுப்பை, கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்டது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்த வாக்கெடுப்பில், யூனியனை விட்டு பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று நூலில் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து, புதிய பிரதமராக வந்த தெரசா மே ஐரோப்பிய யூனியனுடன், பிரெக்சிட் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பிரிட்டனுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை என பிரெக்சிட் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் ஆரம்பத்தில் இருந்தே பிரெக்சிட்டுக்கு இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த தெரசா மே, சரியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அவரது அமைச்சரவையில் உள்ள சிலரே விமர்சித்து வந்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரிட்டன் வெளியேறுவதற்கான பல்வேறு விதிமுறைகளும் ,கட்டுப்பாடுகளும், பேசி முடிக்கப்பட்டு வரைவு ஒப்பந்தம் உருவானது.

 இந்த ஒப்பந்தத்தினால் பிரிட்டனுக்கு பெரும் இழப்பு ஏற்படும், என பிரெக்சிட் ஆதரவு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிப்பது மிக கடினம் என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், அமைச்சரவையை கூட்டினார் பிரிட்டன் மே. 5 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் முடிவில், பல எதிர்ப்புகள் இருந்தாலும் பிரெக்சிட் வரைவுக்கு ஒப்புதல் கிடைத்தது. 9 அமைச்சர்கள், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close