பிரெக்சிட் அதிருப்தியில் பிரிட்டன் அமைச்சர்கள் ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 05:12 am
uk-ministers-reason-after-brexit-draft-agreement

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டி அந்நாட்டு மக்களிடம் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் வெளியேறுவதாக முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக அமையும், என பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியேறுவதற்கான நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வந்தன.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையில், அந்நாட்டிற்கு எந்தவிதமான பொருளாதார சலுகையும் வழங்கக்கூடாது என ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் குறியாக இருந்தனர். இதனால் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் இழுத்துக் கொண்டே சென்றன. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பும் சமீபத்தில் ஒப்பந்தத்திற்கு வந்தன. இந்த ஒப்பந்தம் பிரிட்டன் நாட்டுக்கு மிகவும் மோசமானது என பல்வேறு பிரெக்சிட் ஆதரவு தலைவர்களே அதிருப்தி தெரிவித்தனர். 

தனது அமைச்சரவையை கூட்டிய பிரிட்டன் பிரதமர் தெரசா மே, "இந்த ஒப்பந்தம் இல்லையென்றால், பிரெக்சிட் கிடையாது" எனக்கூறி எச்சரித்து ஆதரவு கோரினார். பல எதிர்ப்புகள் இருந்தாலும் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்தது. இந்த நிலையில் அமைச்சரவையை சேர்ந்த பிரெக்சிட் செயலாளர் டோமினிக் ராப் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மெக்வே ஆகிய இருவரும், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ஒப்பந்தத்திற்கு தங்களால் ஆதரவளிக்க முடியாது, எனக்கூறி இருவரும் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close