வங்கிக்கு ரூ.80 லட்சம் வழங்க மல்லையாவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 05:38 am
britain-court-orders-mallya-to-pay-rs-80-lakh-to-ubs-bank

பிரிட்டனில் சென்று பதுங்கிய விஜய் மல்லையா UBS வங்கியிடம் கடன் வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 80 லட்சம் ரூபாயை அந்த வங்கிக்கு வழக்கறிஞர் கட்டணத்திற்காக வழங்க வேண்டும் என லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, அதன்பின் பிரிட்டன் நாட்டில் தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் இந்திய சிறைகள் மோசமாக இருப்பதாக வழக்கு தொடுத்து, நாடு கடத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகிறார் மல்லையா.

இது ஒரு பக்கம் இருக்க, லண்டனில் மல்லையாவுக்கு சொந்தமான ஒரு இல்லத்தின் மீது அவர் வாங்கியிருந்த கடன் விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லண்டனின் பிரபல பேக்கர் ஸ்ட்ரீட் பகுதியில், உள்ள தனக்கு சொந்தமான இல்லத்தின் பேரில், சுமார் 156 கோடி ரூபாய்க்கு UBS வங்கியிடம் கடன் வாங்கி இருந்தார் மல்லையா. இந்த கடனை அவர் சரியான நேரத்தில் திருப்பி தராததாக கூறி, அந்த வங்கி அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே வங்கி தனது கடனை திருப்பி கேட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார் மல்லையா. இந்த விவகாரத்தில் UBS வங்கியின் வழக்கறிஞர்கள் செலவுகளுக்காக, விஜய் மல்லையா சுமார் 80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வருடம் மே மாதம் விசாரணைக்கு வரவுள்ள, நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை கூறி இந்த தொகையை பாதியாக குறைக்க மல்லையாவின் வழக்கறிஞர் முயற்சி செய்தார். ஆனால், இது சரியான தொகைதான் என நீதிபதி உறுதி செய்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close