பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய யூனியன்!

  Newstm Desk   | Last Modified : 26 Nov, 2018 04:46 am
eu-approves-uk-s-brexit-agreement

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கன பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. இதை ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம், முடியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதாக நூலிழையில் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. பொது வாக்கெடுப்பு நடைபெற, தானே காரணம் என பொறுப்பேற்றுக்கொண்டு, பிரதமர் டேவிட் கேமரூன் பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து அவரது கட்சியை சேர்ந்த, தெரசா மே பிரதமராக்கப்பட்டார். 

பிரெக்சிட் குறித்து, ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பல்வேறு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தது. ஆனால், பிரிட்டன் கோரிக்கைகளுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற நாடுகளும் பிரிட்டனை போல, யூனியனில் இருந்து விலக நேரிடும் என்ற காரணத்தால் அந்நாடு கோரிவந்த அநேக சலுகைகள் மறுக்கப்பட்டன. இந்த நிலையில், 18 மாத பேச்சுவார்த்தைக்கு பிறகு, முழுவதுமாக பிரிட்டன் யூனியனிலிருந்து விலகுவதற்காக வரைவு ஒப்பந்தம், சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. 

ஆனால், இந்த ஒப்பந்தத்தினால், பிரிட்டனுக்கு எந்த லாபமும் கிடையாது என்றும் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், யூனியனில் இருந்து பிரிய இதை விட வேறு ஒப்பந்தம் கிடையாது என கூறி, ஆதரவு கோரி வருகிறார் தெரசா மே. பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளை நடத்திய அமைச்சர் உட்பட பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த இருக்கிறது. அடுத்த மாதம் நடைபெறும் இந்த வாக்கெடுப்புக்கு எதிராக பல கட்சிகள் உள்ளதால், அது தோல்வியை தழுவ நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க், இந்த பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு தனது ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தம் பிரிட்டன் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 29ம் தேதி, பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக யூனியனில் இருந்து  பிரியுமாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close