பாரிஸில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீசார்!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 01:34 pm
french-police-fire-tear-gas-at-protesters-in-central-paris

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்தியதை கண்டித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஈபிள் டவர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் இன்று மூடப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்தியதை கண்டித்து 'எல்லோ வெஸ்ட்' (yellow vest) என்ற பெயரில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், பாரிஸ் நகரின் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் பாரிஸில் உள்ள புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்குச் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்பார்த்தது போல் பாரிஸ் நகரில் போராட்டம் இன்று தீவிரமடைந்தது. இதனால், வன்முறை ஏற்படும் சூழல் இருப்பதால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்கார்களை தடுத்து வருகின்றனர். 

முன்னதாக அந்நாட்டின் அதிபர் மேக்ரோன், பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்படும் என தெரிவித்தார். ஆனாலும், அதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

பிரான்சில் இந்த ஆண்டு மட்டும் பெட்ரோலின் விலை 23% அதிகரித்து, ஒரு லிட்டர் விலை 1.51 யூரோவாக (சுமார் ரூ.121) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close