பிரெக்சிட் ஓட்டு ஒத்திவைப்பு: பதுங்கிய தெரசா மே

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 03:47 am
brexit-vote-postponed-announces-theresa-may

பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த முக்கிய வாக்கெடுப்பை, போதிய வாக்குகள் இல்லாத காரணத்தால் ஒத்திவைப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்தின் இறுதி மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வாக்கெடுப்புக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக உள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பிரிட்டன் அரசு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கடந்த ஓராண்டாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் பிரிட்டனுக்கு போதிய சலுகைகள் கிடைக்கவில்லை, என பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டன் அதிகாரிகள் உட்பட பலரும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த ஒப்பந்தம் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு மிகவும் பாதகமாக அமைந்துவிடும் என ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைவரும் எச்சரித்து வருகின்றனர். ஆனால், இதை தவிர வேறு ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், பிரெக்சிட் நடைபெற இது மட்டும்தான் ஒரே ஒப்பந்தம், என்றும் பிரதமர் தெரசா மே கூறி வருகிறார்.

இந்த மசோதாவை நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு மே எடுத்துச் சென்றார். போதிய வாக்குகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டதால் முந்தைய நாள் வாக்கெடுப்பை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார். அயர்லாந்து எல்லை குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால், இந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது வாக்கெடுப்பை நடத்தினால், அது மிகப்பெரிய அளவில் தோல்வி அடையும் என்பதால் அதை ஒத்திவைத்துள்ளதாகவும் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பு வரும் முன்னரே சர்வதேச சந்தையில் பிரிட்டன் பவுண்டின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close