பிரெக்சிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கிடையாது: மெர்கெல் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 07:59 am
no-deal-on-brexit-merkel-tells-may

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்ய முடிந்தது என பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யிடம், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் தரப்பும், ஐரோப்பிய யூனியனும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவுக்கு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம், பிரிட்டனுக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும், அந்நாட்டிற்கு பல்வேறு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும் பிரிட்டன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இது தவிர வேறு ஒப்பந்தம் கிடைக்காது என வலியுறுத்தி வருகிறார் தெரசா மே. இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தால் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறை வேற வழியே இல்லை, என புரிந்து கொண்ட மே, சில மாற்றங்களை செய்வதற்காக ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்தித்தார். 

ஆனால், இந்த சந்திப்பில் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்ய வாய்ப்பில்லை என மெர்கெல் திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து பிரிட்டனுக்கு இருக்கும் சந்தேகங்களை, போக்கும்விதமாக, இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close