பிரெக்சிட் இல்லைன்னா அவ்ளோதான்! - தெரசா மே எச்சரிக்கை

  shriram   | Last Modified : 06 Jan, 2019 02:19 pm
britain-pm-theresa-may-pushes-critics-for-support-on-brexit-deal

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து என பிரதமர் தெரசா மே எச்சரித்துள்ளார். 

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்தால், பிரிட்டன் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும் என்று நிபுணர்கள் எச்சரித்த நிலையில், பல வலதுசாரி அமைப்புகள் நடத்திய தவறான பிரச்சாரத்தின் விளைவாக, நூலிழையில், பிரிட்டன் பிரிந்து செல்ல முடிவெடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், நிபுணர்கள் எச்சரித்தது போலவே, பிரிட்டன் அரசு நடத்தி வந்த பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய யூனியன் கடும் விதிகளை சுமத்தியது. பிரிட்டன் போல மற்ற நாடுகளும் பிரிந்து செல்ல கூடாது என்பதால், அந்நாட்டின் தரப்பில் விதிக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவு கோரி வருகிறார். ஆனால், அது தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கூறி, பல எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால், பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

வரும் புதன் முதல், ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது. வரும் 15ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், ஜனநாயகத்திற்கு பேராபத்து என தெரசா மே பிரிட்டன் எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close