பிரெக்சிட் ஒப்பந்தம்: பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 06:09 am
theresa-may-under-more-pressure-after-losing-key-vote-in-parliament

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரசா மே முயற்சி செய்து வரும் நிலையில், நாடாளுமன்ற எம்பிக்கள் அவருக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது, நீண்டகால பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இறுதி ஒப்பந்தம்  வரையப்பட்டது. பிரிட்டனுக்கும் யூனியனுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகள் குறித்து போடப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் தரப்பில் அனைவராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தால் பிரிட்டனுக்கு கடும் இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதால், அநேக எம்பிக்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.

மூன்று வருடங்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைந்த ஒப்பந்தம் இது என்பதாலும், இதைத்தவிர வேறு ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனில் இருந்து கிடைக்காது என்பதாலும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே இதை நிறைவேற்ற கடுமையாக முயற்சித்து வருகிறார். ஆனால் இப்படி ஒரு மோசமான ஒப்பந்தம் நிச்சயம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாது என கருதும் எம்பிக்கள், உடனடியாக வேறு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர். அடுத்து செவ்வாய் அன்று, தெரசா மேவின் ஒப்பந்தம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதற்கு ஆதரவு மிக மிக குறைவு என்பதால், நிச்சயம் தோற்றுப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால், வேறு ஒப்பந்தத்தை கொண்டு வர 21 நாட்கள் கால அவகாசம் இருந்த நிலையில், அதை வெறும் 3 நாட்களாக குறைக்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு எம்.பி-க்கள் ஆதரவளித்துள்ளதால், பிரதமர் மேவுக்கு மேலும் நெருக்கடி எழுந்துள்ளது.

இந்த நிலையில், பிரெக்சிட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி, தெரசா மே-வின் ஒப்பந்தம் தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close