நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிரதமர் தெரசா மே

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Jan, 2019 11:55 am
british-pm-theresa-may-wins-confidence-vote-in-parliament


பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட் திட்டத்தை முன்னெடுக்க தங்கள் சொந்த நலன்களை புறந்தள்ளி, ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்று எம்பிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்னதாக நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு ஆதரவாக 325 வாக்குகளையும், எதிர்ப்பாக 306 வாக்குகளையும் பெற்று தெரசா மே வெற்றி பெற்றார்.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை சில ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆகிய இரு தரப்பும் இணைந்து தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவில் எஸ்என்பி உள்பட சில எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் தெரீசா மே சந்தித்துள்ளார். ஆனால், இவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கோபின் பங்கேற்கவில்லை.

தொழிலாளர் கட்சியின் தலைவர் இந்த பேச்சுவார்த்தையின்போது பங்கேற்கவில்லை என்பதில் ஏமாற்றமே. ஆனால் எங்களின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close