பிரபல கால்பந்து வீரர் சென்ற விமானம் மாயம்!

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 08:56 pm
premier-league-team-cardiff-city-s-new-player-s-flight-missing

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் கார்டிஃப் சிட்டி அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா வந்து கொண்டிருந்த விமானம் மாயமாகியுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடி வரும் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அணி கார்டிஃப் சிட்டி. இந்த அணி, தற்போது பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் எமிலியானோ சாலாவை வாங்கியது. சுமார் 138 கோடி ரூபாய் செலவில், கார்டிஃப் சிட்டி அணி அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர் என்ற பெருமையை சாலா பெற்றார். 

28 வயதான அவர், நான்டஸ் அணியில் தனது சக வீரர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். இரண்டு பேர் மட்டும் செல்லக்கூடிய சிறிய ரக பைப்பர் மலிபு ரக விமானத்தில் சாலா வந்துகொண்டிருந்தார். வேல்ஸ் அருகே ஊழல் சேனல் தீவுகள் அருகே வந்துகொண்டிருந்த போது, அந்த விமானம் மாயமானதாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, விமானத்தை கண்டுபிடிக்க வேல்ஸ் அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அந்த விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், சாலாவின் குடும்பத்தினர் மற்றும் கார்டிஃப் சிட்டி நிர்வாகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

தங்களது புதிய வீரரை காண ஆவலாக இருந்த கார்டிஃப் சிட்டி ரசிகர்களும் இந்த சம்பவத்தால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close