BREXIT-க்கு காரணமானவர்கள் நரகத்துக்கு போவார்கள்: ஐரோப்பிய யூனியன் தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 01:34 pm

special-place-in-hell-for-those-who-back-brexit-eu-chief

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள், மிக மோசமாக உள்ள நிலையில், பிரெக்சிட்டுக்கு காரணமானவர்கள் நிச்சயம் நரகத்துக்கு தான் போவார்கள், என ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு, பிரிட்டனில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும், என அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர். நூலிழையில் வெற்றி பெற்ற இந்த வாக்கெடுப்பின் போது, பொதுமக்களிடம் பல்வேறு பொய் பிரச்சாரங்களுக்கும்; மோசடிகளும் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. யூனியனில் இருந்து விலகினால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அவர்கள் கணித்ததை போலவே, தற்போது உருவாக்கப்பட்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தம், பிரிட்டனுக்கு  மிகவும் பாதகமாக அமைந்தது. அந்நாட்டின் பிரதமர் தெரசா மே, விரைவில் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி செய்த நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றம் அதை மறுத்துவிட்டது. தற்போது புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் அதிபர் டொனால்ட் டஸ்க், பிரெக்சிட்டுக்கு காரணமானவர்கள் நிச்சயம் நரகத்திற்கு செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "யூனியிலிருந்து பிரிட்டனை எப்படி வெளியேற்றுவது என்பது பற்றி, ஒரு துளி கூட தெரியாமல், பிரெக்சிட்டுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நரகத்தில் இடம் நிச்சயம்," என்று கடுமையாக சாடினார். மேலும், "பிரிட்டன் நாட்டில் பலருக்கு இதில் இஷ்டமில்லை என எனக்கு நன்றாக தெரிகிறது. பிரிட்டன் நாட்டு மக்கள் எப்போதுமே என் மனதில் இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தற்போது பிரிட்டன் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். பிரிட்டன் யூனியனில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்த முக்கிய தலைவர்கள் இல்லை, என்று வருத்தம் தெரிவித்தார்.  

மேலும் பிரிட்டன் தரப்பில் கோரப்பட்டு வரும் சலுகைகள் எதுவும் புதிய ஒப்பந்தத்திலும் கிடைக்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close