பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 08:32 pm
theresa-may-faces-more-pressure-in-brexit-deal

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் தெரசா மே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவரது கட்சி எம்.பி.க்களிடமே அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இறுதி வரைவு ஒப்பந்தம், கடந்த மாதம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள பிரிட்டன் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஒப்பந்தத்தால் பிரிட்டனுக்கு கடும் இழப்பு ஏற்படும் என, பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டன் ஆளும் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மறு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தெரசா மே நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வரும் மார்ச் 29ம் தேதிக்குள், பிரெக்சிட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வராவிட்டால், எந்த ஒப்பந்தமும் இல்லாமல்  பிரிய வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பிரிட்டன் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா என பிரதமர் தெரசா மே நடத்திய வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதில், பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களே, அவருக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் தெரசா மே, கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close