பிரெக்சிட் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் எம்.பி.க்கள்; கோரிக்கை வைக்கும் தெரசா மே

  Newstm Desk   | Last Modified : 18 Feb, 2019 06:11 am
britain-pm-theresa-may-issues-plea-to-her-mps

பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தனது கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரெக்சிட் குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் பேசிமுடித்த வரைவு ஒப்பந்தத்திற்கு, பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் சொந்த கட்சியினரே, அதை கடுமையாக எதிர்த்தனர். மறு ஒப்பந்தம் கொண்டு வருவது மிக மிக கடினம் என தெரசா ஏற்கனவே கூறினாலும், புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த எம்.பி-க்கள் அவரை வலியுறுத்தினர்.

கடந்த பிப்ரவரி 14ம் தேதி, புதிய ஒப்பந்தம் தொடர்பாக தெரசா மே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா தோல்வியடைந்தது. இந்த நிலையில், மீண்டும் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ள தெரசா மே, தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியுள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கு இன்னும் 40 நாட்களே எஞ்சியுள்ளது. எந்த வர்த்தக ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவது பிரிட்டன் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவை ஏற்படுத்தும் என  நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிக்குமாறு தனது கட்சி எம்.பி.க்களுக்கு மே எழுதியுள்ள கடிதத்தில், "இன்று நாம் செய்யவிருக்கும் செயல்களை வைத்து சரித்திரம் நம்மை எடைபோடும். நமது நாட்டைப் போன்ற பலம், திறன் கொண்ட ஒரு நாடு, வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நமது சிறந்த நாட்கள் இனிமேல் தான் உள்ளது, என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்போது ஒரு முக்கியமான தருணத்தில் நாம் இருக்கிறோம். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவதற்கு, ஒரு சில விவகாரங்களில் சமரசம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அதற்காகத்தான் மக்கள் நம்மை இங்கு அனுப்பி உள்ளனர்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close