ஐ.எஸ்-இல் சேர்ந்த பிரிட்டன் இளம்பெண்ணின் குடியுரிமை பறிப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 05:48 am
is-bride-shamima-begum-s-britain-citizenship-revoked

ஐஎஸ்-இல் சேர்ந்த பிரிட்டன் நாட்டின் இளம்பெண் ஷமீமா பேகம், தற்போது மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரை ஏற்றுகொள்ள மறுத்து, அவரது குடியுரிமையை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.

வங்கதேச பூர்வீகம் கொண்ட ஷமீமா பேகம், இங்கிலாந்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 15 வயதான போது, வீட்டில் இருந்து தப்பி, ஐஎஸ்-இல் சேர்ந்தார். ஐஎஸ் அமைப்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து, சிரியாவில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் தனது மூன்றாவது குழந்தையை அவர் ஈன்றெடுத்தார். தற்போது, ஐ எஸ் பெரும்பகுதிகளில் வீழ்த்தப்பட்டு விட்ட நிலையில், சிரிய பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை மீட்டு, இங்கிலாந்துக்கு கொண்டு வர அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

முகாமில் தன்னுடைய குழந்தை இறந்துவிடும் என்ற அச்சத்தில் தான் இருப்பதாகவும், தன்னை இங்கிலாந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஷமீமா கோரிக்கை வைத்திருந்தார். இதுதொடர்பாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐஎஸ்-இல் சேர்ந்தது தொடர்பாக தான் வருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும், இங்கிலாந்தில் 22 பேரை பலிகொண்ட ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலை, ஐ.எஸ்-ஸுக்கு எதிராக நடைபெற்று வரும் போருடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அவரை மீண்டும் இங்கிலாந்தில் அனுமதிக்க கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பிரிட்டன் உள்துறை அமைச்சகம், அவரது குடியுரிமையை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த அவரது பெற்றோரால், அவருக்கு வங்கதேச குடியுரிமை உள்ளது என்றும், அதனால் இங்கிலாந்து குடியுரிமை இல்லாவிட்டாலும், வங்கதேசத்தில் அவர் வாழலாம், என்றும் பிரிட்டன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பிரிட்டன் அரசின் நடவடிக்கை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், வங்கதேசத்தின் பாஸ்போர்ட் கூட தன்னிடம் கிடையாது என்றும் ஷமீமா தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close