நாடாளுமன்றத்தில் பிரெக்சிட்டுக்கு போதிய ஆதரவு இல்லை: தெரசா மே

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 04:52 am
not-enough-votes-for-brexit-theresa-may

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ள பிரெக்சிட் ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் இரண்டு முறை தோற்ற நிலையில் அதன் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆதரவு இல்லை என்று அந்நாட்டின் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மூலம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்காக பிரிட்டன் அரசு ஐரோப்பிய யூனியனுடன் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்திற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தவிர வேறு ஒப்பந்தம் கிடைக்காது என பிரிட்டன் பிரதமர் தெரசா மே பலமுறை கூறிவிட்ட நிலையில், அவரது பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது இரண்டு முறை வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு முறையுமே நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவரது கட்சியை சேர்ந்தவர்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைகளை மேலும் நீட்டிக்க ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது. அதற்குமுன் மூன்றாவது முறை நாடாளுமன்றத்தில் அதே ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த தெரசா மே திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த வாக்கெடுப்பை சபைக்கு கொண்டு வர போதிய ஆதரவு இல்லை என்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது "இந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பிரிட்டனுக்கு சரியானது என்று நான் கருதுகிறேன். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டால் மே 22ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும். ஆனால், நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close