பொறுமையிழந்த எம்.பி-க்கள்... தெரசா மே-வுக்கு முழுக்கு!

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 10:09 pm
britain-mps-defy-theresa-may-in-new-vote

பிரெக்சிட் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் மீது நம்பிக்கை இழந்த அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரெக்சிட் விவகாரத்தை தங்கள் கையிலேயே எடுக்க புதிய மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்து அந்நாட்டின் பிரதமர் தெரசா மே கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஐரோப்பிய யூனியனுடன் பிரிட்டன் கொண்டு வந்த ஒப்பந்தம், அந்நாட்டில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், இதை தவிர வேறு ஒப்பந்தம் கிடைக்காது என மே கூறி வந்தார். ஏற்கனவே இரண்டு முறை அவரது பிரெக்சிட் ஒப்பந்தம் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. மே 22ம் தேதிக்குள் இரண்டு தரப்பும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில், தெரசா மே மீது நம்பிக்கை இழந்த எம்.பி.க்கள் புதிய வாக்கெடுப்பு மூலம் அவரை பிரெக்சிட் பேச்சுவார்த்தையில் இருந்து விலக்கி வைத்துள்ளனர். தெரசா மே-வின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கொண்டு வந்த இந்த மசோதாவுக்கு, அக்கட்சியின் பல எம்.பி-க்கள் ஆதரவு தெரிவித்தனர். 

இதன்மூலம், மீண்டும் பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் எம்.பி.க்களின் தலைமையில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதில், பிரெக்சிட்டை ரத்து செய்ய மீண்டும் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் பலர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close