என்னை கைது செய்யுங்கள்- 104 வயது மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீசார்

  ஸ்ரீதர்   | Last Modified : 27 Mar, 2019 01:09 pm
elderly-woman-104-reveals-her-wish-to-be-arrested

இங்கிலாந்தில் முதியோர் விடுதியில் தங்கியிருந்த 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரை கைது செய்து போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களின் ஆசையை நிறைவேற்ற இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று முடிவு செய்தது. இதையடுத்து முதியவர்கள் தங்கள் ஆசைகளை துண்டு சீட்டில் எழுதி, அதற்கென தொண்டு நிறுவனம் வைத்திருந்த பெட்டியில் போட்டு உள்ளனர்.

அதில் ஆன் ப்ரோக்ன்ப்ரோ என்ற 104 வயது பாட்டி, நான் வாழ்நாளில் ஒருமுறை கூட சட்டத்தை மீறி நடந்தது இல்லை, எனினும் என்னை ஒருமுறையாவது போலீசார் கைது செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை எழுதியுள்ளார். இதனை பார்த்து வியப்படைந்த தொண்டு நிர்வாகிகள், போலீசாரிடம் 104 வயது பாட்டியின் ஆசையை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

இதனை கேட்டு முதலில் ஆச்சர்யப்பட்ட போலீசார் 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர். இதன்படி முதியோர் இல்லம் வந்த போலீசார், சிறந்த குடிமகளாக இருந்த குற்றத்துக்காக ஆன் ப்ரோக்ன்ப்ரோ பாட்டியை விலங்கு போட்டு கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் கொண்டுவந்து முதியோர் இல்லத்திலேயே அந்த பாட்டியை விட்டுவிட்டு சென்றனர். 
‌newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close