பிரெக்சிட் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி; பொதுமக்கள் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 03:43 am
theresa-may-s-brexit-deal-loses-for-the-third-time

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தம் மீது அந்நாட்டின் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூன்றாவது முறையாக தோல்வியில் முடிவடைந்தது. இதனால் பிரெக்சிட் ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

பிரிட்டன் நாட்டை ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிக்கும் பிரெக்சிட் நடவடிக்கை தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே,  ஐரோப்பிய யூனியன் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் உருவான ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அது பிரிட்டன் பொருளாதாரத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறி, மே-வின் கட்சியை சேர்ந்தவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. 

இரண்டு முறை இந்த ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில், அதில் சில மாற்றங்களை கொண்டு வந்து மூன்றாவது முறையாக நேற்று வாக்கெடுப்புக்கு வைக்கப்பட்டது. பிரெக்சிட் ஒப்பந்ததிற்கு பிரிட்டன் ஒப்புதல் அளிக்க வேண்டிய கடைசி நாள் நேற்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்
இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைத்தால், தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரசா மே கூறியிருந்த நிலையில், மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் பிரெக்சிட் பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்ந்து வருகிறது. புதிய ஒப்பந்தத்திற்காக காலக்கெடுவை நீட்டிப்பது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக வேண்டும் என கோரி நூற்றுக்கணக்கானோர் லண்டனில்  போராட்டத்தில் இறங்கினர். சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறக் கூடாது என லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close