இலங்கைக்கு செல்வதை தவிர்க்க இங்கிலாந்து அரசு அறிவுறுத்தல்

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Apr, 2019 11:33 am
foreign-office-advises-uk-citizens-not-to-travel-to-sri-lanka

இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்க்குமாறு இங்கிலாந்து அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினமன்று இலங்கையின் பல இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டவர்கள் வரும் இடங்கள் உள்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள்  நடத்த வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  இலங்கையில் ஏற்கனவே தங்கியுள்ள இங்கிலாந்தினா் மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close