ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த தம்பதிகள்... 18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்த காதல்!

  ஸ்ரீதர்   | Last Modified : 26 Apr, 2019 11:58 am
couple-born-in-the-same-hospital-on-the-same-day-are-all-set-to-get-married-after-26-years

ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த காதலா்கள் தங்களது 26வது வயதில் திருமணம் செய்து கொண்டனா்.

லண்டனைச் சேர்ந்தவர் ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர். இவர்கள் இருவரும் 1992-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி லண்டனின் உள்ள விகான் மருத்துவமனையில் சிறிய கால இடைவேளையிலே பிறந்து உள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தான் காதல் 18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்து உள்ளது. 

2010-ம் ஆண்டு தங்களது 18-வது வயதில் முதன்முதலாக ஒரு விழாவில் மாறுவேட நிகழ்ச்சிக்காகக் கலந்துகொண்ட போது சந்தித்துக்கொண்டுள்ளனர். முதலில் டாம் தான் ஷவுனாவிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால், ஷவுனா டாமிடம் பேசுவதைத் தவிர்த்தே வந்துள்ளார். 

இதன் பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் ஷவுனாவின் காதலை வென்றார் டாம். சிறிது காலத்திலேயே இந்த ஜோடி தாங்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்ததை அறிந்தவர்கள், தங்கள் காதல், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

தற்போது இந்த ஜோடி தங்களது 26-ம் வயதில் மண வாழ்க்கையில் இணைந்து உள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close