உலகின் சக்தி வாய்ந்த தலைவர் நரேந்திர மோடி...ட்ரம்பை பின்னுக்கு தள்ளினார்!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2019 05:50 pm
pm-narendra-modi-chosen-as-world-s-most-powerful-person-of-2019-by-british-herald

2019 -ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்ற பெருமையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெறுகிறார் என்று "பிரிட்டீஷ் ஹெரால்டு" இதழ் அறிவித்துள்ளது.

லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டீஷ் ஹெரால்டு, உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார்? என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. மொபைல்ஃபோன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.

இவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

நால்வரில், 30.9 சதவீத வாக்குகளை பெற்று, பிரதமர் நரேந்திர மோடி  முதலிடம் பிடித்தார். 29.9 வாக்குகளை பெற்று, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டாமிடம் பிடித்தார். டொனால்ட் ட்ரம்ப், ஜி ஜிங்பிங் ஆகியோர் முறையே 21.9, 18.1 சதவீத வாக்குகளை பெற்றனர்.

30.9 சதவீத வாக்குகளுடன், உலகின் மிக சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் விதத்தில், பிரிட்டீஷ் ஹெரால்டு தமது ஜூலை மாத இதழின் முதல் பக்க அட்டையில் (Wrapper), நரேந்திர மோடியின் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close