அதிர்ச்சி...வாட்ஸ் - அப், ஃபேஸ்புக் சேவையை பெறுவதில் திடீர் சிக்கல்!

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2019 10:43 pm
facebook-instagram-and-whatsapp-face-major-outage-down-for-users-across-the-globe

வாட்ஸ் -அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ராகிராமில் புகைப்படங்கள் மற்று வீடியோ பதிவுகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்வதில் பயன்பாட்டாளர்களுக்கு  திடீரென இன்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இன்று மதியம் ஆரம்பித்த இந்த சிக்கல், மெல்ல மெல்ல அமெரிக்காவின் சில பகுதிகளிலும் தற்போது நீடித்து வருகிறது. இதனால் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தியாவில் ஃபேஸ்புக், வாட்ஸ் - அப் பயன்பாட்டில் இன்றிரவு 9:45 மணி வரை, எவ்வித பிரச்னையும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

திடீர் சிக்கலுக்கான சரியான காரணம் இதுவரை தெரிய வரவில்லை என்றும், இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close