பிரிட்டனின் புதிய பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

  கிரிதரன்   | Last Modified : 24 Jul, 2019 09:45 pm
prime-minister-narendra-modi-congratulations-boris-johnson-on-assuming-office-as-prime-minister-of-the-united-kingdom

பிரெக்ஸிட் விவகாரத்தை முன்வைத்து, பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே தமது பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போரிஸ் ஜான்சன், பிரிட்டனின் புதிய பிரதமராக முறைப்படி இன்று பொறுப்பேற்று கொண்டார்.

அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் (ஜான்சன்) பணி சிறக்க வேண்டும் என்பதும், இந்தியா -பிரிட்டன் உறவு மேன்மேலும் வலுபெற வேண்டுமென்பதையும் இந்த தருணத்தில் எனது விருப்பமாக தெரிவித்துக் கொள்கிறேன்" என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close