தலைப்பு செய்திகளில் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்!

  முத்து   | Last Modified : 09 Dec, 2019 03:49 pm
teenager-who-threw-boy-from-10th-floor

டி.வி., பத்திரிகைகளில் பெயர் வருவதற்காக சிறுவனை 10-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூர எண்ணம் கொண்ட இளைஞர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி லண்டனில் உள்ள ‘டேட் மாடர்ன்’ அருங்காட்சியகத்துக்கு சென்றார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் தனது தாயுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு வந்திருந்தான். அப்போது ஜான்டி திடீரென அந்த 6 வயது சிறுவனை தூக்கிக்கொண்டு அருங்காட்சியகத்தின் மாடிக்கு ஓடினான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் மற்றும் அங்கிருந்தவர்கள் ஜான்டியை விரட்டினர். எனினும் கட்டிடத்தின் 10ஆவது மாடியில் இருந்து சிறுவனை கீழே தூக்கி எறிந்து விட்டார். நல்லவேளையாக 5-வது மாடியில் இருந்த மேற்கூரையின் மீது சிறுவன் விழுந்து காயத்துடன் உயிர் தப்பினான். 

இதற்கிடையே ஜான்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான  வழக்கு விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படி செய்ததாக கூறினார். இதனையடுத்து ஜான்டியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை விவரம் வருகிற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close