நியூயார்க்: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 29 Dec, 2017 01:18 pm


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க் நகரில் உள்ள பிரான்க்ஸ் எனும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீ பற்றியது. முதல் தளத்தில் பற்றிய தீ வேகமாக பிற தளங்களுக்கும் பரவ துவங்கியது. கீழ்தளம் முழுவதும் தீ பற்றிக் கொண்டதால் மேல் தளத்தில் குடியிருந்தவர்களால் கீழே வர முடியவில்லை. இந்த தீ விபத்தில் ஒரு கைக்குழந்தை உட்பட 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலையும் மிக மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 170 பேர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். உடலை உறைய வைக்கும் குளிரிலும் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வாகனங்களில் இருந்து சிதறிய தண்ணீர் சில நிமிடங்களில் பனியாக உறைந்து விடும் அளவுக்கு குளிர் நிலவி உள்ளது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு  பிரான்க்ஸ் நகரில் நடைபெற்ற மிக மோசமான தீ விபத்து இதுவாகும். தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்நகர மேயர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close