எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; 10 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 29 Dec, 2017 04:58 pm


எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தேவாலயத்தில் இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர். 

தலைநகர் கெய்ரோவில் ஹெல்வான் மாவட்டத்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். எதிர்பாராத இந்த தாக்குதலில் இதுவரை இரண்டு போலீசார் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். போலீசார் தீவிரவாதிகளை நோக்கி தாக்கியதில் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close