குழந்தை அடுப்பை பற்ற வைத்ததால் தீ விபத்து; 12 பேர் பலி

  SRK   | Last Modified : 29 Dec, 2017 10:04 pm


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானார்கள். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வந்த அதிகாரிகள், முதல் தளத்தில் ஒரு குழந்தை அடுப்பை எரிய விட்டு சென்றதால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களில் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மோசமான தீ விபத்து இதுதான் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், தீ விபத்து தொடர்பான கட்டிடத்தின் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை என தெரிவித்தனர். அதனால், எப்படி தீ பற்றியது, வேகமாக பரவியது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

தொடர் ஆய்வுக்கு பின், ஒரு குழந்தை அடுப்பை எரிய விட்டு விளையாடியதில், இந்த தீ விபத்து ஆரம்பித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தீ பரவ முக்கிய காரணமாக கேஸ் குழாய்கள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close