ஈரானை உலுக்கும் போராட்டம்; 2 பேர் பலி

  Shanthini   | Last Modified : 31 Dec, 2017 03:00 pm


ஈரானின் சில நகரங்களில் நடந்து வரும் போராட்டங்கள், வன்முறையாக மாறி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானில் குறைந்து வரும் வாழ்வாதாரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, சில நகரங்களில் மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளதாக கூறி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சட்டவிரோதக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என ஈரான் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் அமைச்சரின் எச்சரிக்கையை புறக்கணித்துள்ளனர். வன்முறை வெடித்ததற்க்கு காரணம், வெளிநாட்டு சக்திகளின் சதி என ஈரானிய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close