கொலராடோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

  Anish Anto   | Last Modified : 01 Jan, 2018 11:29 am

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 

டென்வருக்கு தென்மேற்கே 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ் ராஞ்ச் எனும் இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேற்று அதிகாலை 6 மணி அளவில் அவசர உதவியை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கொலராடோ மாகாண காவல்துறை அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருந்த நபர் போலீசாரை நோக்கி சுட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். அதிகாலை வேளையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 4 போலீசார் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் யார்? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்தது வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close