"என் பட்டன் தான் பெருசு" அமெரிக்க அதிபர் டிரம்ப்

  Shanthini   | Last Modified : 03 Jan, 2018 08:58 pm


வட கொரிய அதிபர் கிம் ஜாங் ஊன்னிடம் உள்ள அணு ஆயுத பட்டனை விட தன்னிடம் உள்ள பட்டன் பெரியது என்று  அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில்  மார்தட்டியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து செய்தியில் அதிபர் கிம் ஜாங் ஊன், வட கொரியாவின் அணு ஆயத ஏவுகணையை செலுத்தும் பட்டன் தன்  மேஜையில் தான் எப்போதும் உள்ளது என்று கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

டிரம்ப்பின் இந்த பதிவிற்கு பெருமளவிலான மக்கள் தங்கள் எதிர்ப்புக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். "அணுஆயுதம் என்பது விளையாட்டு பொருள் அல்ல. இவர்களின் வாய்தகராறில் அணுஆயுதப் போர் வந்துவிடும் போல தெரிகிறது" என்று பலர் டிரம்ப்பை விமர்சித்து வருகின்றனர்.

 இந்நிலையில் அதிபர்  டிரம்ப்பின்  ஆதரவாளர்கள், "டிரம்ப் சொல்வது அனைத்தும் உண்மையானது; அமெரிக்காவின் பலத்தை அது காட்டுகிறது" என  தமது  ட்விட்டர் பதிவில் கூறியுள்ளனர். மேலும் பலர் அதிபர் டிரம்ப்பின் கருத்தை கேலி செய்தும் வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close