அமெரிக்காவை தாக்கவுள்ள 'பாம் சூறாவளி'; இதுவரை 11 பேர் பலி

  SRK   | Last Modified : 03 Jan, 2018 11:10 pm


கடந்த 10 நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு பகுதி முழுவதும் கடும் பனியால் உறைந்துள்ளது. கிழக்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் வெளிவர முடியாத அளவுக்கு பனி சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில், நாளை முதல் இந்த பகுதிகளை இன்னும் மிக மோசமான பனி சூறாவளி தாக்க உள்ளது. பாம் சைக்லோன் எனப்படும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாக்கும் பகுதிகளின் வெப்பநிலை, 24 மணி நேரத்தில் கடுமையாக குறையுமாம். பல மாகாணங்கள் பொதுமக்கள் வெளியே வரமுடியாத அளவு பனியில் மூழ்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதுவரை, அதீத குளிரால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

எனவே, இனிமேல் அதிகமாகும் குளிரை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close