பாகிஸ்தானுக்கு அளித்த ரூ.5,704 கோடி பாதுகாப்பு உதவியை நிறுத்திய அமெரிக்கா

  Anish Anto   | Last Modified : 06 Jan, 2018 06:32 am

5,704 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உதவிகளை பாகிஸ்தானுக்கு வழங்காமல் அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தான் நாடு தீவிரவாதத்திற்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி  அந்நாட்டுக்கு வழங்கி வந்த 1,624 கோடி ரூபாய் ராணுவ நிதியை அமெரிக்கா நிறுத்தியது. பாகிஸ்தான் இரட்டை வேஷம் போடுவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக அந்நாடு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனால் தங்கள் போக்கை மாற்றி கொள்ளாவிட்டால் இதை விட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்தது.

இந்த நிலையில் தற்போது 5,704 கோடி ரூபாய் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. கூட்டணி ஆதரவு நிதியின் கீழ் அளிக்கப்பட்டு வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி ஒருவர், "இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து அவர்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். இந்த நடவடிக்கையை தண்டனையாக அல்லாமல் தூண்டுதலாக பாகிஸ்தான் கருத வேண்டும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close