டிரம்ப் டவரில் தீ; 3 பேர் காயம்

  SRK   | Last Modified : 09 Jan, 2018 06:53 am


அமெரிக்கவின் நியூயார்க் நகரில் உள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவரில் நேற்று திடீரென தீ பிடித்தது. 

அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கூரையில், திடீரென தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 3 பேர் இதில் காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மின்சார லைன்களில் உள்ள கோளாறு காரணமாக தீ பற்றியதாகவும், கட்டிடத்தினுள் தீ பரவவில்லை என்றும் தீயணைப்பு படை வீரர்கள் கூறினர். தங்கள் வீரர் ஒருவர் உட்பட 3 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது என்றும் கூறினர். சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாக கூறிய டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப், தீயணைப்புப் படை வீரர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

இதே கட்டிடத்தின் மேல் தளத்தில் அதிபர் டிரம்ப்புக்கு ஒரு சொகுசு அபார்ட்மண்ட் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரும், அவருடைய குடும்பத்தினரும் வெள்ளை மாளிகையில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close