எச்-1பி விசா விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை!

  முத்துமாரி   | Last Modified : 09 Jan, 2018 04:17 pm


எச்-1பி விசா விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்காவின் குடியுரிமைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்கா சென்று பணிபுரிவதற்கு வழங்கப்படும் எச்-1பி விசா நீட்டிப்புக்கு எதிராக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் பணிபுரியும் இந்தியர்கள் கடும் நெருக்கடியில் இருந்தனர். இந்த விதிமுறையை தளர்த்தும்படி இந்தியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதே நேரத்தில்  அமெரிக்கா  எச்-1பி விசா நீட்டிப்பை ரத்து செய்ய முயற்சி செய்து வந்தது. 


அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எச்-1பி விசா நீட்டிப்பு ரத்து செய்யப்படுகிறது என ஊடகங்களில் பேசப்பட்டது.  இதுகுறித்து குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோதும் கூட அவர்கள் இதை ஒப்புக்கொண்டனர். இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் நிலவி இருந்தது. 

இந்த சமயத்தில், எச்-1பி விசா விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்காவின் குடியுரிமை துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். விசா நடைமுறையில் மாற்றங்கள் வந்தால் கூட தற்போது எச்-1பி விசா வைத்துள்ளோர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை வராது என அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close