கலிபோர்னியாவில் கனமழை, நிலச்சரிவு: 13 பேர் பலி

  முத்துமாரி   | Last Modified : 10 Jan, 2018 12:15 pm


கலிபோர்னியாவில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கடும் பனி மூட்டத்துடன் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கலிபோர்னியா மாகாணத்தில் சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாகாணத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டுள்ளது. 

வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த காணாமல் போன 21 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close