வானில் பறந்து 2வது மாடியில் சொருகிய கார்

  Sujatha   | Last Modified : 16 Jan, 2018 08:36 am


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அதிவேகமாக சென்ற கார், வானில் பறந்து இரண்டாவது மாடிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதியில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில், 60அடி மேலே பறந்து, பக்கவாட்டில் இருந்த கட்டிடத்தின் 2வது மாடியில் சொருகி கொண்டது. 


பல் மருத்துவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தின், இரண்டாவது மாடியில், காரின் முன் பகுதி மாட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. அதிகாலை என்பதால் மக்கள் யாரும் அங்கு இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. மேலும் காரில் பயணித்த  இருவர் பத்திரமாக வெளியேறினர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close