டொனால்ட் டிரம்ப்புக்கு மூளை நோயா? டாக்டர் பதில்

  SRK   | Last Modified : 18 Jan, 2018 09:22 am


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சோதனை செய்த வெள்ளை மாளிகை மருத்துவர், அவர் அட்டகாசமான உடல்நிலையில் இருப்பதாகவும், அவருக்கு ஞாபாக மறதி, டிமென்ஷியா என கூறுவதில் முழுக்க முழுக்க பொய் என்றும் கூறினார்.

சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உடல்நிலம் குறித்து பல வதந்திகள் கிளம்பி வந்தன. வெள்ளை மாளிகை அதிகாரிகளை பேட்டியெடுத்து வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், டிரம்ப்புக்கு நெருக்கமான அதிகாரிகளே, அவருக்கு டிமென்ஷியா என்ற மறதி நோய் இருப்பதாக அச்சம் கொண்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அவர் சொன்ன விஷயங்களை திரும்ப திரும்ப சொல்வதாகவும், சமீப காலமாக அது அதிகரித்துள்ளதாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கமாகவே பல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை திரும்ப சொல்லும் பழக்கம் கொண்டவர் என்பதால், டிரம்ப்புக்கு அல்சைமர் போன்ற ஏதோ ஒரு நோய் இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில், டிரம்ப்பை சோதனை செய்த வெள்ளை மாளிகை மருத்துவர், அட்மிரல் ரானி ஜாக்சன், அவர் அட்டகாசமான உடல்நிலையில் இருப்பதாக தெரிவித்தார். டிரம்ப்பை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவரது செயல்பாடுகளில் எந்த குறையும் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, டிரம்ப் தானாக முன்வந்து, அறிவுத்திறன் தேர்வு ஒன்றை எடுத்துக் கொண்டதாகவும், அதில் அவர் 30க்கு 30 மதிப்பெண் பெற்றதாகவும் மருத்துவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close