வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 62வது இடம்

  Sujatha   | Last Modified : 23 Jan, 2018 06:56 am


உலக பொருளாதார கூட்டமைப்பு வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது.

உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், இந்தியாவுக்கு 62வது இடமும், அண்டை நாடுகளான சீனாவுக்கு 26 வது இடமும், நேபாளத்திற்கு 22வது இடமும், வங்காள தேசத்திற்கு 34வது இடமும், பாகிஸ்தானுக்கு 47வது இடமும் கிடைத்துள்ளது. இலங்கைக்கு 40 வது இடம் கிடைத்துள்ளது. 

முதல் இடத்தில், நர்வே நாடும், அயர்லாந்துல லக்சம்ரபர்க், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களும் பெற்றுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு 23-வது இடமும், ஜப்பானுக்கு 24-வது இடமும் கிடைத்துள்ளது. 

கடந்தாண்டு இந்தியா 60வது இடம் பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 62வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close