முடங்கிய அமெரிக்க அரசு, பணிக்கு திரும்புகிறது!

  SRK   | Last Modified : 23 Jan, 2018 08:54 am


நாடாளுமன்றத்தில், அரசு செலவுகளுக்கான பட்ஜெட் நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, அமெரிக்க அரசு சில தினங்களுக்கு முன் மூடப்பட்டது. போதிய நிதி இல்லாததால், அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகள் செயல்பட முடியாமல் போனது. 

3 நாட்களாக அரசு பணிகள் முடங்கி போயிருந்த நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்காலிகமாக, பிப்ரவரி 8ம் தேதி வரை அரசை நடத்த இந்த இடைக்கால நிதி உதவும்.

கடந்த வெள்ளியோடு அரசு முடங்கிய பின், இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் உறுப்பினர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க ஒரு மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்து வந்தனர்.

அமெரிக்காவிலேயே தங்கள் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்த அவர்களுக்கு வேறு நாடு தெரியாது என்பதால் இந்த சட்டத்திற்கு அந்நாடு முழுவதும் ஆதரவு உண்டு. ஆனால், அதை டிரம்ப் தலைமையில் ஆளும் குடியரசு கட்சி தடுத்தது. இதை எதிர்த்து செலவுக்கான அரசு பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த குழந்தைகளுக்கான குடியுரிமை மசோதாவை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதை அடுத்தே, இந்த இடைக்கால பட்ஜெட் சட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close